featued_image

யாருமற்ற நிலையில் தான் இருந்தோம் | யாரோன் ஸ்டெய்ன்பச்

auhtor

on
2020-04-19


By :
Oorukaai


133 Views

 

உலகிலேயே முதன் முதல் கொரோனா நோய்க்கான தடுப்பூசியைப் பெற்ற நபர், அந்தக் காட்சி தொடர்பாக விபரிக்கிறார்.

இரு பிள்ளைகளி;ன தாயான, சியாட்டலில் வசிக்கும் 44 வயதுடைய பெண்மணியொருவர் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியைப் பெறும் முதல் நபராக தெரிவாகியிருந்தார். அவர் இந்த தடுப்பூசி மருந்தை வழமையாக குளிர் நாடுகளில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தடிமனுக்கான மருந்தைப் போன்றதோடு ஒப்பிட்டுக் கூறியிருந்தாலும், அவர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசியானது தொன் கணக்கான அபாயங்களைக் கொண்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளரான ஜெனிபர் கெலன் “த ரெலிகிறாம்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், குறிப்பிட்ட இந்த தடுப்பு மருந்து பரிசோதனைக்காக தன்னார்வலர்கள் தேவை என முகப்புத்தகம் ஒன்றில் இருந்த அழைப்பை பார்த்தே தான் இந்த முடிவை எடுத்திருந்ததாக கூறியிருந்தார்.

இந்த வைரஸ் தாக்கத்தின் பிடியில் நாங்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் உதவிக்கு யாருமற்ற நிலையில் தான் இருந்தோம். இந்த உலகளாவிய அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்கு நாம் விரும்பினாலும் கூட துரதிஸ்டவசமாக நம்மால் எதுவுமே செய்யமுடியாதிருந்தது. அப்போது தான் நான் இந்த அறிவிப்பை முகப்புத்தகத்தில் பார்க்க நேரிட்டது. நான் அந்த வாய்ப்பை பயன்படுத்த முடிவெடுத்தேன். இதன்வழி இந்த அச்சுறுத்தலிலிருந்து மீள என்னால் ஏதாவது பங்களிப்பை வழங்க முடிந்தால் அது மிக நல்லதாக இருக்குமென நான் நம்பினேன் என்று குறிப்பிட்ட அந்த பிரித்தானிய செய்தித்தாளுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்த உலகளாவிய அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் மிகவும் பதட்டத்தில் இருக்கிறோம். பயத்தில் நாங்கள் கட்டுப்பாட்டை இழந்து செயற்பட ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்த மருத்துவ பரிசோதனையில் நான் பங்கேற்ற பின்பு ஒருவிதமான நிம்மதியை உணர்கிறேன். இது தேவையற்று அளவுக்கதிகமாக பயப்பட்டு பதட்டமடைவதற்கு பதில் ஒரு விதமாக கட்டுப்பாட்டு மனநிலையை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மருத்துவ பரிசோதனை தொடர்பாக கெலரின் ஈடுபாடு இவ்வாறிருக்க, அவரது குடும்பத்தினர் கணவனர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது இந்த முடிவு தொடர்பாக மிகவும் கவலையும் அக்கறையும் கொண்டிருந்தனர். ஏற்கனவே, அவரும் அவரது கணவரும் தமது மகனை ஒரு சில மருத்துவ பரிசோதனைகளிற்காக முன்னர் அனுமதித்திருந்தாலும் அவை இப்போதைய இந்த கொவிட் 19 தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனையைவிட முற்றிலும் வேறானவை. உண்மையில் இப்போது கெலர் பங்கெடுத்த கொவிட் 19 இற்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பின்னர் சிலவேளைகளில் கெலருக்கு கொவிட் 19 பீடிப்பதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கெலர் மேலும், குறிப்பிட்ட தடுப்பு மருந்தில் பாவிக்கப்பட்டிருந்த எம்.ஆர்.என்.ஏ- 1273 என்கின்ற வைரஸின் தாக்கம் தன் உடம்பில் ஏற்படாது என்பதை தனது அன்புக்குரியவர்களிற்கு காட்டி அச்சத்தை நீக்கி அவர்களிற்கு நம்பிக்கையூட்டுவதற்காக, குறிப்பிட்ட அந்த மருந்து முதலில் விலங்குகளிற்கு ஏற்றி பரிசோதனை செய்து காட்டப்பட்;டது. எனினும், இந்த மருந்தை மனிதர்களிற்கு ஏற்றி பரிசோதனை செய்வதென்பது இதுவே முதன் முறை. அதனால் மனித உடலில் இதன் தாக்கம் எப்படியிருக்கம் என்பது பற்றி கேள்விகள் எழவே செய்கின்றன.

சியாட்டலின் கெய்சர் பேமனென்ற் வொசிங்டன் மருத்தவ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் நடத்துகின்ற இந்த ஆய்வில், பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்ற நபர்களிற்கு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்படும். முதல் தடுப்பூசியேற்றி 28 நாட்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும். அதன்பின்னர், பரிசோததனைக்குட்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக ஒரு வருடம் வரை தொடர் கண்காணிப்புக்குள் வைத்திருக்கப்படுவார்கள். இந்த பரிசோதனை நடவடிக்கையில் பல தொன் கணக்கான ஆபத்துக்கள் எழலாம் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் எனது நேரான சாதகமான சிந்தனையும் நல்ல எண்ணங்களும் அந்த ஆபத்துக்களிலிருந்து என்னை அதிக தூரத்திற்கு மீட்டுவருமென நான் நம்புகிறேன் என கெலர் மேலும் தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி பெறப்பட்ட முதல் நபர் தான் தான் என்பதை மார்;ச் மாதம் 16 ஆம் திகதி ஒரு ஒருங்கிணைந்த கூட்டத்திற்காக தான் அழைக்கப்பட்டபோது கெலர் தெரிந்துகொண்டார். எனினும், முகமூடி மற்றும் நீல நிறத்திலான கையுறைகள் அணிந்த நபர் ஒருவரால் தனது இடப்பக்க தோள்மூட்டில் தடுப்பூசியேற்றப்படுகின்ற காட்சியானது, ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களது தலைமையின் கீழான புதிய விளம்பரம் ஒன்றில் காட்சிப்டுத்தப்பட்டதை கண்டபோது தான் சற்று அதிர்ந்துதான் போனேனென கெலர் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இப்போது தனக்கு கிடைத்திருக்கின்ற இந்த புகழ் தொடர்பில் தனது 16 வயது நிரம்பிய மகன் கைடெனும், 13 வயது நிரம்பிய மகள் எலிசனும் மிகுந்த சந்தோசமாகவுள்ளார்கள். இதுபற்றித எத்தனை டிக்டொக் காட்சிகள் உள்ளதென தினமும் அவர்கள் என்னிடம் சொல்வார்கள். இது அவர்களிற்கு மிகமிக களிப்புள்ள மகிழ்ச்சியான ஒரு விடயமாகத் தோன்றுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி மருந்து பெற்றுக்கொண்ட ஒரு நபர்; தொடர்ச்சியாக இரண்டு வாரங்களிற்கு அவரது உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்களை கூட ஒரு பதிவேட்டில் பதிந்து வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தடுப்பூசி பெற்ற முதல் நாள் எனது உடல்வெப்பநிலை சற்று உயர்ந்து காணப்பட்டது. அதற்கு, அடுத்த நாள் எனது கையில் சிறு புண் போல இருந்தது. ஆனால், அவ்வளவு தான். அதற்குப்பின்னர் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாம் வழமைபோலவே இருக்கிறது. அது ஒரு வழமையான தடிமன் காய்ச்சலிற்கான மருந்து போலவே எனக்குத் தோன்றியது.

கெலருக்;கும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட மற்றைய 44 பேருக்குமான இரண்டாம் கட்ட தடுப்பூசியானது வருகின்ற வாரம் கொடுக்கப்படவுள்ளது. ஆனால், அவர்களின் மேலுள்ள கண்காணிப்பானது அடுத்த வருடம் வரை அதாவது 2021 ஆம் ஆண்டு வரை நீளும்.

தான் உட்படுத்தப்பட்ட இந்த பரிசோதனையிலிருந்தோ அல்லது உலகின் மற்றைய பாகங்களில் நடக்கும் பரிசோதனையிலிருந்தோ, கொடிய இந்த நோய்க்கான தடுப்பு மருந்தானது மிக விரைவாக கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, தன் மீதான பரிசோதனை எப்படி முடிந்தாலும், இந்த கொடிய நோய்க்கான தடுப்பூசியானது எப்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கான முயற்சியில் நானும் ஒரு புள்ளியாயிருந்ததற்காக நான் நிச்சயமாக பெருமைப்படுவேனெனவும் அவர் தெரிவித்தார்.

 Yaron SteinbuchNew York Post

தமிழில் : முகில்நிலா

Our Facebook Page

Archives